السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 20 April 2015

யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்?

ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!
.
ஹதீஸ் ஆதாரத்துடன் பரம்பரை பெயர்களுடன் உலமாக்களின் உரை தொகுப்பு.
.
கண்டிப்பாக பார்த்து விட்டு ஷேர் (Share) செய்யுங்கள்.


யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்?

யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்?

யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்?

யார் இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்?


.

நாங்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (‘வாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது பனு தமீம் குலத்தைச் சேர்ந்த துல் குவைஸிரா என்னும் மனிதர் வந்து. இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள். உனக்குக் கேடு உண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாய் நஷ்டமடைந்து விடுவாய்’. என்று பதிலளித்தார்கள். 
.
உடனே உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் வெட்டி விடுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இவரை விட்டு விடுங்கள். நிச்சயமாக இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். 
.
அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச்செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். 
.
(அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. 
.
அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும் அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்’. என்று கூறினார்கள். 
.
ஹழ்ரத் ஸயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு) ஸஹிஹுல் புகாரி 3610